குன்னூர் அருகே காரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்-2 பேர் கைது


தினத்தந்தி 13 May 2023 6:00 AM IST (Updated: 13 May 2023 6:01 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே காரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே காரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான்பராக் போன்ற போதை தரும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வெளி மாநிலங்களிலிருந்து போதை பொருட்கள் ரகசியமாக கடத்தி வரப்படுகிறது. போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்தி வருபவர்கள் மீது தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி (பொறுப்பு) தலைமையில் வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி மற்றும் போலீசார் குன்னூர் அருகே வெலிங்டனில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது.

12 மூட்டைகளில் குட்கா

இந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட 12 மூட்டை போதை பொருளான குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். உடனடியாக போதை பொருளான குட்காவை கொண்டு வர பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்தி வந்ததாக வெலிங்டன் பகுதியை சேர்ந்த ஜாபர் அலி (வயது 45), அப்துல் மஜீத் (54) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து குன்னூருக்கு குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.


Next Story