10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருப்பூர்
திருப்பூர் ரெயில் நிலையத்தில், ரெயில்வே போலீசார் தீவிரமாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
அந்த ரெயிலில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, விஜயகுமார், காவலர்கள் ராஜதுரை, பர்கத்தலிகான் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினார்கள். அப்போது எஸ்.9 பெட்டியில் கழிப்பிடம் அருகே கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story