குத்தாலம் மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா


குத்தாலம் மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலத்தில் மகா மாரியம்மன் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழாவையொட்டி கடந்த 1-ந்தேதி அம்மன் வீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் பால்குட திருவிழா நடந்தது. முன்னதாக காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து புறப்பட்ட பால்குடங்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. சீர்காழி தேர் தெற்கு வீதியில் பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதிவிழாவையொட்டி பக்தர்கள் சட்டநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகுகாவடி, கரகங்களுடன் ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் கோவிலின் முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story