ஹஜ் புனித யாத்திரை ஆலோசனை முகாம்


ஹஜ் புனித யாத்திரை ஆலோசனை முகாம்
x

வாணியம்பாடியில் ஹஜ் புனித யாத்திரை ஆலோசனை முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லீம்களுக்கு ஆலோசனை வழங்கும் முகாம் வாணியம்பாடி - நீலிக்கொல்லை பகுதியில் உள்ள முபீதே ஆம் அரசு நிதி உதவி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சென்னை ஹஜ் கமிட்டி சார்பில் நடந்த முகாமுக்கு நீலிகொல்லை பகுதி நலச் சங்க தலைவர் முனீர் அஹமத் தலைமை தாங்கினார். கே.அஷ்வாக் அஹமத், திருப்பத்தூர் காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அல்தாப் அஹமத் வரவேற்றார்.

முகாமில் மாவட்ட காஜி மவுலானா மவுலவி ஹாபிஸ் சையது அப்துர் ரஹ்மான், சென்னை ஹஜ் கமிட்டி பயிற்சியாளர் ஹபிபுல்லா ஆகியோர் கலந்து கொண்டு மெக்கா புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லீம்களுக்கு அங்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து விளக்கி பேசினர்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story