கோடைகால ஆக்கி பயிற்சி நிறைவு


கோடைகால ஆக்கி பயிற்சி நிறைவு
x
திருப்பூர்


பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால ஆக்கி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முகாமில் மாணவர்களுக்கு உடற்தகுதி, அடிப்படை திறன்கள், நுணுக்கங்கள் போன்றவை கற்றுத் தரப்பட்டன. கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் நிறைவு விழாவில் இப்பள்ளியில் படித்து காவல் துறையில் பணியாற்றும் காளிமுத்து, சந்தோஷ் குமார் மருதமுத்து, அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பின்னர் முகாமில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகளையும் சிறப்பு பரிசுகளையும் வழங்கி மாணவர்களை பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல்காதர், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story