ஆக்கி போட்டி விழிப்புணர்வு முகாம்
உலககோப்பை ஆக்கி போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 29-ந்தேதிவரை ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடத்தப்படுகிறது. உலககோப்பை ஆக்கி போட்டியை பிரபலப்படுத்தும் இந்திய ஆக்கி நிர்வாக அமைப்பான ஆக்கி இந்தியாவின் சார்பில் இந்தியாவில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 12 முதல் 14 வயது மாணவர்களுக்கான ஆக்கி பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆக்கி முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் திருமூர்த்தி ராஜன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் பயிற்சியாளராக இருந்து விளையாட்டு நுணுக்கங்களையும், உலக கோப்பை ஆக்கி போட்டியை பற்றியும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.முடிவில் மாணவர்களுக்கு ஆக்கி அணியின் பனியன் வழங்கப்பட்டது.