நாங்குநேரியில் அரை நிர்வாண போராட்டம்


நாங்குநேரியில் அரை நிர்வாண போராட்டம்
x

நாங்குநேரியில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரியில் ஏற்கனவே அறிவித்தவாறு மாவட்ட மருத்துவமனை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாங்குநேரி வளர்ச்சி குழு மற்றும் அரசியல் கட்சியினர், சமூகநல ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நாங்குநேரி பஜாரில் நேற்று அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் மேல் சட்டை அணியாமல் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story