பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது
அரியலூர் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 115 அரசு பள்ளிகள் மற்றும் 15 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று அரையாண்டு தேர்வு தொடங்கியது. இதில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 13 ஆயிரத்து 456 மாணவர்களும், 9 முதல் 10-ம் வகுப்பு படிக்கும் 11,599 மாணவர்களும், தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெ றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 42 ஆயிரம் பேர் நேற்று அரையாண்டு தேர்வை எழுதினர். இந்த தேர்வு 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.இந்தநிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளி துணை ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story