ஹாலோ பிளாக் தயாரிக்கும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
அவினாசி தெக்கலூர் ஊராட்சியில் வணிக வளாக கட்டிடம், சுய உதவிக் குழு உற்பத்தி மற்றும் அங்காடிகள் ஆயத்த ஆடை தயாரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றையும், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் மையம், மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு, இ-சேவை மற்றும் வாடகை பாத்திரங்கள் மையம், மாவரைக்கும் எந்திரம் மற்றும் விற்பனை அங்காடி, ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடங்கள் ஆகியவற்றையும், புதுப்பாளையம் ஊராட்சியில் கால்நடை தீவனம் தயாரிப்பு எந்திரம் ஆகியவற்றையும் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது இணை இயக்குனர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மேலாளர் (டி.எஸ்.எம்.எஸ்) நிதியா, மாவட்ட வள பயிற்றுனர் எஸ்.முனிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், விஜயகுமார் ஊராட்சி தலைவர்கள் மரகதமணி மணியன் (தெக்கலூர்), சாந்தி வேலுசாமி (வேலாயுதம்பாளையம்), ஆகியோர் கலந்து கொண்டனர்.