பள்ளி குழந்தைகளுக்கு கைஅச்சு வடிவ பயிற்சி
பள்ளி குழந்தைகளுக்கு கைஅச்சு வடிவ பயிற்சி
திருப்பூர்
அவினாசி
சென்னைகளிமன் விரல்கள் குழு சார்பில் ஓவியம், மற்றும் அச்சு வடிவம் ஆகியவைகள் பயில்வதற்கான பயிற்சி வகுப்பு அவினாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பாஸ்ட் ஆப் பேரீஸ் மூலம் கை விரல் அச்சு மற்றும் களிமண் மூலம் அச்சு செய்து அவற்றிற்கு பல நிறங்களில் வண்ணம் தீட்டினர். மேலும் செய்தித்தாள்களை கொண்டு தொப்பி, வண்ணத்துபூச்சி, பறவை, மேஜை, நாற்காலி, கப்பல், உள்ளிட்ட பல பொருட்களை செய்து அசத்தினர். இதற்கான ஏற்பாடுகளை நல்லது நண்பர்கள் அறக்கட்டளை ரவிக்குமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி துப்புறவு ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story