மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்


மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்
x

மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க நாகை மாவட்ட கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பாலமுருகன் வரவேற்றார். மாநில செயலாளர் வில்சன் பேசினார். கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கணேசன், கவிஞர் சொக்கலிங்கம் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாகை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிளை அமைப்புகளை ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன், அடையாள அட்டை, உபகரணங்கள் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியம் ஏற்படுத்தி உள்ளதற்கு நன்றி தெரிவிப்பது, அரசு ஏற்படுத்தி உள்ள நலவாரியத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து கொள்ள வேண்டும் மாற்றுத்திறனாளிக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story