விளாத்திகுளத்தில்மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி


விளாத்திகுளத்தில்மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில்மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ரேன்சம் பவுண்டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ரேன்சம் பவுண்டேசன் மேற்பார்வையாளர் பேராசிரியர் ராஜபாண்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ், தூத்துக்குடி தி.மு.க வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சின்ன மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story