மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமை சங்கம் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமை சங்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் மத்திய அரசின் 100 நாள் வேலைக்கான நிதியை தொடர்ந்து குறைத்து வருவதை கண்டித்தும், கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி முதுகுளத்தூர் தாலுகா குழு சார்பாக தபால் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா தலைவர் முனியாசாமி தலைமை தாங்கினார். மயில்சாமி, ஆரோக்கியபிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் தங்கபாண்டி, ராமர், சுப்பிரமணி, மதன், மாவட்ட விவசாய சங்க நிர்வாகி கணேசன், நக்கீரன், முனியசாமி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதேபோல் கடலாடி தாலுகா குழு சார்பாக சிக்கல் தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story