மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது

நாகப்பட்டினம்


நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட கிளை அமைப்பாளர் லெட்சுமி முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். ே்பாலீஸ் துறை உதவி எண் 100 மற்றும் 108 ஆகியவற்றில் வாட்ஸ்-அப் செயலியை உருவாக்கி, அதில் மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆகியவை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story