மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போய்விட்டதாக கூறும் நபர்களை கண்டுபிடிக்க வேண்டும், ஆசிரம நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் அதன் முறைகேடுகளுக்கு துணைபோன காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை ஆகியவற்றின் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மனநல காப்பகத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார், துணை செயலாளர் முத்துவேல், துணைத்தலைவர்கள் வேணு, ரங்கநாதன், அய்யனார், துணை செயலாளர்கள் யுகந்தி, கலியபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story