மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்
சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
மயிலாடுதுறை
திருவெண்காடு:
சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமை தாங்கினார். முகாமில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சாந்தி, சீர்காழி குடிமை பொருள் தனி தாசில்தார் சபிதா பீவி, தரங்கம்பாடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுந்தரி, சீர்காழி முதுநிலை வருவாய் ஆய்வாளர் குணசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு கேட்கும் திறன் கருவியும், 2 பேருக்கு நடப்பதற்கு உதவியாக நடைபயிற்சி கருவியையும் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
Related Tags :
Next Story