பஸ்சில் தவறவிட்ட லேப்டாப் உரியவரிடம் ஒப்படைப்பு


பஸ்சில் தவறவிட்ட லேப்டாப் உரியவரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அரசு பஸ்சில் தவறவிட்ட லேப்டாப்பை போக்குவரத்து கழக அதிகாரிகள் உரியவரிடம் ஒப்படைத்தனர். பஸ்சில் தவறவிட்ட

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் அரசு பஸ்சில் தவறவிட்ட லேப்டாப்பை போக்குவரத்து கழக அதிகாரிகள் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பஸ்சில் தவறவிட்ட லேப்டாப்

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றுமுன்தினம் இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை 1-ம் பிரிவிற்குட்பட்ட டிரைவர் குமார் ஓட்டினார். நரசிம்க மூர்த்தி கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நாகர்கோவில் வடசோி பஸ் நிலையத்தை அடைந்ததும் அனைத்து பயணிகளும் இறங்கிச் சென்றனர்.

அப்போது பஸ்சின் முன் இருக்கையின் அடியில் ஒரு பை கிடந்தது. இதைகண்ட கண்டக்டர் நரசிம்க மூர்த்தி, அதை எடுத்து பார்த்தார். அதில் ஒரு லாப்டாப் மற்றும் ஆதார் கார்டு இருந்தது. உடனே பஸ் கண்டக்டர், அந்த பையை நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

திகாரிகளுக்கு நன்றி

இதையடுத்து அந்த லெப்டாப்பை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக பையில் இருந்த ஆதார் அட்டையில் இருந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது, அது நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த சைமன் ராஜ் என்பதும், பஸ்சில் பயணம் செய்தபோது தனது பையை தவறவிட்டு விட்டு பல இடங்களில் தேடியதாக தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள், அவரை நேற்று காலை நாகர்கோவிலுக்கு வரவழைத்து எழுதி வாங்கிவிட்டு பையுடன் லேப்டாப்பை ஒப்படைத்தனர். தவறவிட்ட லேப்டாப் கிடைத்த மகிழ்ச்சியில், சைமன் ராஜ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நேர்மையுடன் ஒப்படைத்த கண்டக்டரை அதிகாரிகள் பாராட்டினர்.


Next Story