தவறவிட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு


தவறவிட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு
x

ஓடும் ரெயிலில் தவறவிட்ட செல்போன் உரியவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர்

காட்பாடி

ஓடும் ரெயிலில் தவறவிட்ட செல்போன் உரியவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பதி நேரு நகரை செக்சபானா (வயது 29). இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து காட்பாடி வரை ரெயிலில் பயணம் செய்தார். அப்போது ரெயில் பெட்டியில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தவற விட்டுவிட்டார். இதுகுறித்து அவர் காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

அவர்கள் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அதே ரெயில் பெட்டியில் பயணம் செய்த வேலூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் செல்போனை யாரும் உரிமை கோராததால் எடுத்து சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து தகவல் தெரிவித்தவுடன் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு ஜெயக்குமார் வந்து செல்போனை ஒப்படைத்தார். அந்த செல்போனை செக்சபானாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story