மீட்கப்பட்ட மகாவீரர் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு


மீட்கப்பட்ட மகாவீரர் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
x

காரியாபட்டி அருகே காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட மகாவீரர் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட மகாவீரர் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மகாவீரர் சிலை

காரியாபட்டி அருகே பெ.புதுப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் ராகவன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்களான சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 அடி உயரம், 2¼ அடி அகலம் கொண்ட ஒரு சிலையை கண்டறிந்தனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளரான சாந்தலிங்கத்திடம் கலந்து ஆலோசித்தனர். பின்னர் இந்த சிற்பம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண சிற்பம் என உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராகவன் கூறியதாவது:- கள ஆய்வின் போது கண்ெடடுக்கப்பட்ட சிலை வர்த்தமானர் எனும் சமணர் சமயத்தின் 24-வது தீர்த்தங்கரான மகாவீரர் சிலையாகும்.

சகிப்புத்தன்மை

இந்தசிலை தியான நிலையில் அமர்ந்தவாறு உள்ளது. தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளிவீசும் பிரபாவளையம் காணப்படுகிறது.

இந்த சிலையை அப்பகுதிமக்கள் சமணர் சாமி என்று அழைத்தும், தங்களின் குலதெய்வமாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். அத்துடன் குறிப்பிட்ட நாளில் பொங்கலிட்டும், முடி காணிக்கை செலுத்தியும் தரிசனம் செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சமணர் சார்ந்த நிகழ்வுகளை தொடர்ச்சியாக காணும்போது மக்கள் சமய சகிப்புத்தன்மை கொண்டிருந்தனர் என்பதையும் உணர முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்படைப்பு

கலெக்டர் மேகநாதரெட்டி மகாவீரர் சிலையை பாதுகாப்பாக எடுத்து விருதுநகர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று காரியாபட்டி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தலைமையில் பெ.புதுப்பட்டி காட்டுப் பகுதியில் இருந்த மகாவீரர் சிலை பாதுகாப்பாக மீட்டு விருதுநகர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story