முருகன் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
அம்பை அருகே கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி
அம்பை அருகே தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3½ அடி உயரமுள்ள முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிலைைய கைப்பற்றினர்.
இந்த நிலையில் அம்பை தாசில்தார் விஜயா, துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் இசக்கி ஆகியோர் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அந்த சிலையை கொண்டு வந்தனர். பின்னர் அந்த முருகன் சிலை அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story