காணாமல் போன ரூ.18.60 லட்சம் செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
நெல்லையில் காணாமல் போன ரூ.18.60 லட்சம் செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன சுமார் ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 118 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கி, செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், "மக்கள் யாரும் செல்போனை தவறவிட்டாலோ, காணாமல் போனாலோ சிம்கார்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு சேவை நிறுத்தம் செய்ய வேண்டும். பின்னர் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அல்லது 1930 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும் பிரபல நிறுவனங்கள் பெயரில் வரும் பரிசு பொருட்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சூடுதல் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ரமா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம், போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.