மனநலம் பாதித்து குணமடைந்த பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு


மனநலம் பாதித்து குணமடைந்த பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதித்து குணமடைந்த பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருப்பத்தூர்

மனநலம் பாதித்து குணமடைந்த பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வேலூர் பேண்ட் லேண்ட் மருத்துவமனை அருகில் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரன் என்பவரின் மனைவி சுசிலா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அவரை மீட்டு திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். சுசிலாவுக்கு தொடர்ந்து அங்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் காரணமாக அவர் குணமடைந்தார்.

அதைத்தொடர்ந்து அவரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி சால்வை அணிவித்து சுசிலாவை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்து நன்றாக பார்த்து கொள்ளும்படி ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்ல தலைவர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்


Next Story