தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை


தூக்குப்போட்டு  டிரைவர் தற்கொலை
x

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் தாலுகாவில் உள்ள மேலப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆத்தியப்பன் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை அழைத்து வந்து கடந்த 6 மாதமாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண் திடீரென மணிகண்டனை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் புதிதாக கட்டி வரும் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் தாய் ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story