குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே சித்தப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் கோவிந்தராஜ் (வயது 28) தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் தனது வீட்டின் முன்பு உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story