தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சிவகாசி,
சாத்தூர் தாலுகாவில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்கிற செந்தில் (வயது 38). இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி ஏழாயிரம்பண்ணையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவம் பார்த்து வந்த நிலையில் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story