தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு
தாளவாடி
சத்தியமங்கலம் புளியங்கோம்பையை சேர்ந்தவர் மாதன் (வயது42). கூலிதொழிலாளி. அவருடைய மனைவி ராதிகா. இவர்களுடைய மகள் பிரியா. இவர்கள் 3 பேரும் ஆசனூர் அருகே உள்ள ஒங்கல்வாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர். மாதன் வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் ஓங்கல்வாடி அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story