தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி நூலக தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 56). விவசாய கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜ், மனைவி மாலதியை மண்வெட்டியால் தாக்கினார். இதில் மாலதி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மனைவியை அடித்து விட்டோமே என்று, நாகராஜ் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, வீட்டில் யாரும் இல்லாதபோது நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு வந்த உத்தமபாளையம் போலீசார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருடைய உடலை பிரதே பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதை கண்டித்து நாகராஜின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story