தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது36). விருதுநகர் பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்த இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இவரது மனைவி மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்ட நிலையில் 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலையில் இவரது மகன் ஹரி சிவா பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய போது வீடு பூட்டி இருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டை திறந்து பார்த்தபோது கருப்பசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story