தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவருக்கு இளவரசி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முருகன் பூக்கட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகனுக்கும், அவரது மனைவி இளவரசிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் முருகன் குடித்துவிட்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இளவரசி இரவு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் காலையில் 6 மணிக்கு வீடு திரும்பிய போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அப்போது வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த இளவரசி வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து கதவை உடைத்து உள்ளே சென்று முருகனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இளவரசி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story