மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி திடீர் தற்கொலை
விருதுநகரில் மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொைல செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகரில் மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொைல செய்து கொண்டார்.
கூலி தொழிலாளி
விருதுநகர் நாராயணமடம் தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன்(வயது 62). கூலி தொழிலாளியான இவர் நோய் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
செலவுக்கு தனது மனைவி செல்வராணியிடம் பணம் கேட்டு வந்த நிலையில் பணம் தராவிட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று அதிகாலை விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மேம்பாலத்தின் மின்கம்பத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மனைவி செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.