திருச்செந்தூரில் அனுமன் ஜெயந்தி விழா:இளநீரை பற்களால் உரித்து தலையில் உடைத்த பக்தர்கள்


திருச்செந்தூரில் அனுமன் ஜெயந்தி விழா:இளநீரை பற்களால் உரித்து தலையில் உடைத்த பக்தர்கள்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் அனுமன் ஜெயந்தி விழாவில் இளநீரை பற்களால் உரித்து தலையில் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கல்யாணசுந்தர விநாயகர் கோவில் தெருவில் உள்ள ராமதூதயோக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

அப்போது விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது பற்களால் இளநீரின் நாரை உறித்தனர். பின்னர் அதனை தங்களது தலையில் உடைத்து இளநீரை குடித்தனர். சில பக்தர்கள் தங்களது தலையில் இளநீரை ஊற்றினர். ஆஞ்சநேயர் போன்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இளநீரை பற்களால் உரித்து குடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story