அரிக்கேன் விளக்கு, தீப்பந்தம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்


அரிக்கேன் விளக்கு, தீப்பந்தம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்
x

அரிக்கேன் விளக்கு, தீப்பந்தம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

மின்கட்டண உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள், கடை வியாபாரிகள், சிறு குறுதொழில் நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நேற்று அரிக்கேன் விளக்கு மற்றும் தீப்பந்தம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதிக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பகுதிக்குழு செயலாளர் ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் இளையராஜா, நெடுஞ்செழியன், மணிகண்டன், அப்துல்பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் கருத்தை கேட்காமல் மின்கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியதை கண்டித்தும், மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஜங்சன் பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுதி செயலாளர் ரபீக்அகமது தலைமை தாங்கினார். நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story