அறுவடை பணி மும்முரம்


அறுவடை பணி மும்முரம்
x

பூதலூர் பகுதியில் எந்திரம் மூலம் குறுவை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

பூதலூர் பகுதியில் எந்திரம் மூலம் குறுவை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது.

எந்திரம் மூலம் அறுவடை பணி

பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்கள் வட்டாரத்தில் பல இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கியது. இதையடுத்து பூதலூர் பகுதிகளில் அறுவடை பணிகள் எந்திரங்கள் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நெல் அப்படியே டிராக்டர் டிரைலரில் பிடிக்கப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

நெல்லின் ஈரப்பத அளவு 17.5 சதவீதம் இருக்க வேண்டும் என்பதால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் வெயிலில் காய வைத்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். தாமதமாக நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 20 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது உள்ள மேட்டூர் அணை நீர்மட்டம் பாசன பகுதிகளுக்கு முறையாக வழங்கப்பட இயலாமல் போனால் குறுவை பயிர் செய்த விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


Next Story