மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? - வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பதில்


மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? - வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
x

கோப்புப்படம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா என்ற வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டூடு பதிலளித்துள்ளார்.

சென்னை,

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி உள்ளதா? என்று 12.12.2022 அன்று வைகோ எம்.பியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

கர்நாடகாவின் மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான கொள்கை அளவில் அனுமதி பெறுவதற்கு கர்நாடக அரசு, மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கி உள்ளது. சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தாவா தீர்ப்பாயத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தல், மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஏற்றுக்கொள்வது போன்ற நிபந்தனைகள் ஆகும். மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு, கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்க மேற்கூரிய நிபந்தனை பொருந்தும்.

அதன்பிறகு, மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, கர்நாடக அரசால் 2019 ஜனவரியில் மத்திய நதிநீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, மற்றும் விரிவான திட்ட அறிக்கையின் நகல்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணைத்திற்கு அனுப்பப்பட்டது. காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின் போது, மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் ஒரு நிகழ்ச்சி நிரலாக சேர்க்கப்பட்டது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடைபெறவில்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story