ஓட்டலுக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பணம் கொள்ளை


ஓட்டலுக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பணம் கொள்ளை
x
கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே ஓட்டலுக்குள் புகுந்த ஒரு கும்பல் பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி, ஊழியரையும் தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓட்டல் சூறை

களியக்காவிளை அருகே செறுவாரக்கோணம் பகுதியில் கனகராஜ் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் அன்சாத் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் கடையை காலி செய்ய வேண்டுமென உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன் ஊழியரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

கொள்ளை

மேலும் அந்த கும்பல் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துக்கொண்டு, கண்காணிப்பு கேமராவையும் தூக்கி சென்றதாகவும் தெரிகிறது.

இதுபற்றி அன்சாத் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story