புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்த மளிகை கடை உரிமையாளர் கைது


புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்த   மளிகை கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2022 1:00 AM IST (Updated: 22 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

மளிகை கடை உரிமையாளர்

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள வீரனூரை சேர்ந்தவர் குருசாமி (வயது 51) இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று அந்தியூர் போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? என்று சோதனை நடத்தினார்கள். அப்போது கடைக்குள் விற்பனைக்காக 17 பாக்கெட் புகையிலை இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குருசாமியை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தார்கள்.


Next Story