கேர்மாளம் வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
கேர்மாளம் வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு
தாளவாடி
ஆசனூர் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட கேர்மாளம் வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் தினேஷ் தலைமையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தால் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கானக்கரை கிராம பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள அங்கன்வாடி வளாகத்துக்கு அருகே 2 நாட்டுத் துப்பாக்கிகள் கிடந்துள்ளதை பார்த்தனர். உடனே அதை கைப்பற்றி ஆசனூர் ேபாலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story