'உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும்': விஜயகாந்துக்கு முதல்-அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து


உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும்: விஜயகாந்துக்கு முதல்-அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Aug 2022 10:00 AM IST (Updated: 25 Aug 2022 10:01 AM IST)
t-max-icont-min-icon

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



Next Story