போதை மாத்திரை, ஊசி விற்ற2 பெண்கள் உள்பட 5 பேர் கைது


போதை மாத்திரை, ஊசி விற்ற2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
x

போதை மாத்திரை, ஊசி விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசாா் கைது செய்தனா்.

ஈரோடு

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் மதுவிலக்கு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 2 பெண்கள் உள்பட 5 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் மாத்திரைகளும், ஊசிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றி போலீசார் பார்வையிட்டனர். அப்போது வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி போதை ஊசியாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போதை மாத்திரை, ஊசியை விற்றதாக ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்த ராஜூவின் மகன் பசுபதி (வயது 23), காஞ்சிக்கோவில் காமராஜ்நகரை சேர்ந்த பழனிசாமியின் மகன் சேகர் ராஜா (23), ஈரோடு வெட்டுக்காட்டுவலசு விவேகானந்தா சாலையை சேர்ந்த லியாகத் அலியின் மகள் சமீம்பானு (22), ஈரோடு மாணிக்கம்பாளையம் நேதாஜிநகரை சேர்ந்த மாணிக்கத்தின் மகள் சந்தியா (22), வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த டார்ஜன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 49 மாத்திரைகள், 2 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் பசுபதி, சமீம்பானு ஆகியோர் மீது ஏற்கனவே போதை மாத்திரைகள், ஊசி விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.


Related Tags :
Next Story