கைத்தறி துறையை முன்மாதிரி துறையாக மாற்றிவிட்டார்


கைத்தறி துறையை முன்மாதிரி துறையாக  மாற்றிவிட்டார்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைத்தறி துறையை முன்மாதிரி துறையாக மாற்றிவிட்டதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. மாணவரணி மற்றும் நகர தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் அப்துல்லா, கிருஷ்ணன், தாமோதரன், வையாபுரி, பரமேஸ்வரி, ஆனந்தராஜ், கோபிகிருஷ்ணன், ரமேஷ், பாலாஜி ஆகிேயார் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூங்காவனம் வரவேற்றார்.

பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ஆர்.காந்தி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்கள்.

அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், 'ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து ஒரு வருடம் தான் ஆகிறது. ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள 30 வார்டுகளிலும் ஒவ்வொரு தெருவிலும் ஏதேனும் குறைகள் உள்ளதா? என தினந்தோறும் சென்று நகரமன்ற உறுப்பினர்கள் பார்வையிடுகிறார்கள். குறை இருந்தால் நேரில் சென்று பார்த்து சரி செய்கிறார்கள். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கைத்தறி துறையை ஒரு முன்மாதிரி துறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிவிட்டார். அதிகமாக வேலைக்கு செல்பவர்கள் பெண்கள் தான். அவர்களின் துயரம் போக்கவே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்' என்றார்.

பொதுக்கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சிவானந்தம், துரைமஸ்தான், குமுதா குமார், ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், கண்ணையன், அசோகன், கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் சேஷா வெங்கட், அக்ராவரம் முருகன் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்களும், தில்லை உள்ளிட்ட நகர செயலாளர்களும், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், மாணவரணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் துரைகுமார் நன்றி கூறினார்.


Next Story