தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்


தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல் படை மற்றும் உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் வெள்ளப்பட்டி கடற்கரையில் ரோந்து சென்ற போது, அங்கு வெள்ளை நிற சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு 15 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

பீடி இலை

உடனடியாக போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அந்த மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story