காங்கிரசுக்கு வாக்கு கேட்டு சென்றஅமைச்சர், எம்.எல்.ஏ.வுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
ஆரத்தி எடுத்து வரவேற்பு
ஈரோடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக, ஈரோடு கோட்டை பகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஸ்குமார் மற்றும் கட்சியினர் அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றனர். காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ. ராஜேஸ்குமாருக்கு அந்த பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story