தூத்துக்குடியில்சிறப்பாக பணியாற்றிய 49 போலீசாருக்கு பாராட்டு
தூத்துக்குடியில்சிறப்பாக பணியாற்றிய 49 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 49 போலீசாரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தீஸ், ஸ்ரேயா குப்தா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story