திம்பம் மலைப்பாதையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல்


திம்பம் மலைப்பாதையில்         லாரிகள் நேருக்கு நேர் மோதல்
x

திம்பம் மலைப்பாதையில் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதை

சத்தியமங்கலத்தை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது.

நேருக்கு நேர் மோதல்

இந்த நிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த லாரியானது திம்பம் மலைப்பாதையின் 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே காலை 8 மணி அளவில் சென்றபோது கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஈரோட்டுக்கு அரிசி பாரம் ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 லாரிகளின் முன்புறமும் சேதம் அடைந்தது.

இதனால் 2 லாரிகளின் டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், மலைப்பாதையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றிய தகவல் கிடைத்தும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய 2 லாரிகளையும் அப்புறப்படுத்தி சாலையோரத்துக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக 11 மணி அளவில் போக்குவரத்து சீரானது. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story