கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டுபுதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை


கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டுபுதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தேசிய விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விவசாயிகள் கூட்டம்

இளையரசனேந்தல் விநாயகர் கோவில் சந்திப்பில் தேசிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளையரசனேந்தல் பிர்க்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ஸ்ரீபதி, கிளை தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புதிய மாவட்டம்

வளர்ந்து வரும் தொழில் நகரமான கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இளையரசனேந்தல் பிர்க்காவில் உள்ள 12 பஞ்சாயத்துக்களை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் இணைக்க தமிழக அரசு உத்தரவிட கேட்டுக் கொள்ளப்பட்டது. 2022- 23-ம் ஆண்டு மழை அளவு குறைந்ததால் விவசாயம் பொய்த்து விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

எனவே, வறட்சி பாதித்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய துணை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story