நகர்புற சுகாதார நல மையம் கட்டுமான பணி தீவிரம்


நகர்புற சுகாதார நல மையம்  கட்டுமான பணி தீவிரம்
x

நகர்புற சுகாதார நல மையம் கட்டுமான பணி தீவிரம்

திருப்பூர்

உடுமலை

உடுமலை நகராட்சி 15-வது நிதிக்குழு மான்யம் 2021-2022 திட்டத்தில் உடுமலை ராமசாமி நகரில் ரூ.25லட்சம் செலவில் நகர்புற சுகாதார நல மையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த கட்டிட கட்டுமானப் பணிகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சி பகுதியில் ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில்தான் அரசு மருத்துவமனை, நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. தெற்கு பகுதியில் மருத்துவ மனைகள் இல்லை.ஆனால் ரெயில் நிலையத்திற்கு தெற்கு பகுதியில் ஏறாளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த நிலையில் ராமசாமி நகரில் நகர்புற சுகாதார நல மையம் கட்டப்படுவது, இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக அமையும். அதனால் புதியதாக கட்டப்பட்டு வரும் இந்த நகர்புற சுகாதார நல மையம் கட்டிட கட்டுமான பணிகள் முடிந்ததும், காலம் தாழ்த்தாமல் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Next Story