சுகாதார பேரவை கூட்டம்
சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில்குமார் வரவேற்று பேசினார். ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி, பள்ளி மாணவர்களுக்கான திட்ட மருத்துவர் புகழேந்தி ஆகியோர் சுகாதாரத்துறை சார்பில் பேரவையின் பணிகளையும், திட்டத்தையும் விளக்கி பேசினர். சுகாதாரத்துறை சார்ந்த கல்வி, ஊரக வளர்ச்சித் துறை, குழந்தைகள் வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், தா.பழூர் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், அவற்றை செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காக்கும்பெருமாள் செய்திருந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) குருநாதன் நன்றி கூறினார்.