பழைய இரும்பு கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு


பழைய இரும்பு கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
x

ஆரணியில் பழைய இரும்பு கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி நகராட்சி பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீரில் உருவாகும் கொசுக்கள் (ஏ.டி.எஸ்.) மூலம் டெங்கு மற்றும் சிக்குன் குனியா நோய் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையடுத்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உத்தரவின்படி ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி அறிவுறுத்தலின்படி நகரில் செயல்பட்டு வரும் பழைய பொருட்கள் (இரும்பு கடைகள்) விற்பனை செய்திடும் இடங்களில் மேஜர் டாக்டர் சிவஞானம் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், களப்பணி உதவியாளர்களுடன் டி.பி.சி. பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மழைநீர் தேங்கி அதில் கொசு உற்பத்தி இருப்பதை கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. பொது சுகாதார சட்ட பிரிவுகளின்படி கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டன.

மேலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வணிக வளாகத்திலும், வீடு பகுதிகளிலும் பயன்பாடற்ற நிலையில் உள்ள பொருட்களான தேங்காய் ஓடு, டயர், பெயிண்ட் டப்பாக்கள், ஆட்டுரல், உடைந்த பாத்திரங்கள் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள பழைய பொருட்களை அகற்றி மழை நீர் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story