சுகாதார துறையினர் ஆய்வு
தலைஞாயிறு பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு
நாகை மாவட்டம் தலைஞாயிறு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் தலைஞாயிறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகையிலை தடுப்பு நடவடிக்கையின்படி புகையிலை பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம், 'புகையிலை பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்ட பகுதி' என்ற வாசகம் எழுதப்பட்ட விளம்பரப்பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். கடைகளில் சிகரெட் பற்ற வைப்பதற்கு ஏதுவாக எரியூட்டப்பட்ட கயிறு, மின்சார எந்திரம் வைக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது இல்லை என்ற வாசகத்துடன் பதாகை வைக்கவும் அறிவுறுத்தினர். இதுபோன்ற விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு சிறை தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.