தென்னை மட்டைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்


தென்னை மட்டைகளால் சுகாதார  சீர்கேடு ஏற்படும் அபாயம்
x

தென்னை மட்டைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

கன்னியாகுமரி

அருமனை:

பேச்சிப்பாறை அணையின் மறுகால் பகுதியில் இருந்து கோதையாறு தொடங்கி திற்பரப்பு, அருமனை, குழித்துறை வழியாக சென்று தேங்காப்பட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் ஏராளமான தென்னை, ரப்பர் என பலவிதமான மரங்கள் இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்னதாக பேச்சிப்பாறை முதல் தேங்காப்பட்டணம் வரை கோதையாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் அளக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அரசு புறம்போக்கு பகுதியில் இருந்த ரப்பர் மற்றும் தென்னை மரங்கள் பொதுப்பணி துறையால் நம்பர் போடப்பட்டு, வெட்டி அகற்ற டெண்டர் விடப்பட்டது.

அதை டெண்டர் எடுத்தவர்கள் தென்னை மரங்களை வெட்டி தடியை எடுத்து விட்டு தென்னை மட்டைகளை ஆற்றிலேயே போட்டு விட்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் குளிக்கும் பகுதிகளில் தென்னை மட்டைகள் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல இடங்களில் குளிப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளதோடு தண்ணீர் துர்நாற்றம் வீசி சுகாதார சீர் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றில் கிடக்கும் தென்னை மட்டைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story